யார், என்ன, எதற்கு
தமிழுக்கெனச் சிங்கப்பூரிலிருந்து வரும் உன்னதமான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் நமது தேசிய பல்கலைக் கழகத்திலும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்ததே NUS தமிழியல் ஆகும். பல்கலைக் கழகத்தின் தெற்காசியப் படிப்புகளின் ஓர் அம்சமாகத் தமிழியல் துவங்கி வருகிறது. தமிழியல் கற்பித்தல் அணுகுமுறை, வரலாறு, இலக்கியம், சமூகவியல், மானுடவியல் போன்ற பலதரப்பட்ட துறைகளை உள்ளடக்குகிறது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் நமது பாடங்கள் கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிவேகமாக மாறி வரும் நம் உலகத்தின் தேவைகளுக்கேற்ப , நமது மாணவர்களும் இரு மொழித் தேர்ச்சிப் பெற்ற, கூரியச் சிந்தனையாளர்களாக விளங்குகிறார்கள்.
இணையத் தளம் என்கிற இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகம், நெரிசல் குறைவு. இங்கு NUS தமிழியலுக்கு ஒரு நிலையான மேடை இருந்தாக வேண்டும் என்ற நோக்கைக் கொண்டே இந்த முயற்சி உருவாகியுள்ளது. NUS தமிழியலின் இரு மொழி அணுகுமுறையைத் தழுவிச் செதுக்கப்பட்டிருக்கும் வலைத்தளம் இது.
இந்த இணைய மேடை இளையர்களை இணைக்கும் மேடையாக மேன்மேலும் வளரட்டும் - நமது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்தில் மட்டுமின்றி, உலகத் தமிழ் வலையிலும் தடம் பதிப்போம் என்ற லட்சியத்தோடு!
Who, What, Why?
As an area of teaching and research, NUS Tamil Studies is reflective of Tamil's unique identity and importance in Singapore. Tamil Studies at NUS is taught as part of the university's South Asian Studies programme. Our modules bring together perspectives from history, literature, sociology and anthropology, among others. Tamil Studies' commitment to promoting effective bilingualism in teaching and learning complements our emphasis on interdisciplinarity.
Our curriculum has been designed with an eye to equipping our students with the requisite skills and perspectives to succeed in a rapidly changing world. Our students are trained to excel in bilingual communication. They are trained, moreover, to think across narrow academic preoccupations and disciplinary frameworks. Envisioned as an e-platform for NUS Tamil Studies, this website has been designed to reflect and complement our bilingual teaching focus.
May Inaiya Medai grow from strength to strength as a forum that connects our Tamil youth in Singapore and beyond!