top of page

இருநூறு டாலர்/ Two Hundred Dollars

“அறையில் ஐம்பது பேர்

வியர்வை, அழுக்கு, சேர்

அதில் மூழ்கி கிடக்கிறோம்

பயமும் குழப்பமும் நிறைந்து

ஒவ்வொரு நாளும் பிழைக்கிறோம்

யாருக்கு நோய் எவனுக்கு காய்ச்சல்

என்று தெரியாமல் தவிக்கிறோம்

அதற்கு மேலும்,

உங்களைப் பார்க்க

துடியாய்த் துடிக்கிறோம்

நீங்களும் நலமா என்று இன்று விசாரிக்கிறோம்

ஆனால் நாளை பதில் கிடைப்பதற்குள்

இந்த சிறையில் மறைகிறோம்

மறைந்த இந்த பிணத்திற்கு டாலர் இருநூறு

ஆனால் வெளிநாட்டு ஊழியருக்கு மரியாதை கிடைக்கும் நாளோ வெகுதூரம்!”


-------------------------------------------------------------------------------------------------


(Translation not by the author)


"Fifty people in a room

Sweat, Dirt, Mud

Drowned in them, we live.


Scared and confused,

We survive each day.


Who's sick, who ails,

Not knowing, we struggle


Over and beyond this,

We long to see you at home


We ask that you keep well

But before we receive your reply

We perish, unmourned


Two hundred dollars for this corpse,

But we cannot hope to earn even an iota of respect."


Author: Rachannaa Velayutham (Major: Sociology; Minor: South Asian Studies)

Date Written: 8 April 2020

67 views0 comments

Comments


bottom of page